தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!

நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

News image
நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
Updated On :8 பிப்ரவரி 2024, 8:54 am

DIN

நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நொய்டா விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

நொய்டா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தில்லி நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் மற்றும் பேருந்துகளில் வருகை தந்துள்ளனர்.

நொய்டா அதிவிரைவுச் சாலையில் இருந்து தில்லி செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து விவசாயிகளின் டிராக்டர்களை நொய்டா காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தில்லி நோக்கிச் செல்வதை தடுப்பதற்காக தில்லி எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.