தேர்தல் மை தயாரிக்கும் பணியை தொடங்கியது மைசூரு ஆலை

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், 75 ஆண்டுகள் பழைமையான மைசூரு தொழிற்சாலை, அழியாத மை தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.
அழியாத மை தயாரிப்புப் பணி தொடக்கம்
அழியாத மை தயாரிப்புப் பணி தொடக்கம்


மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், 75 ஆண்டுகள் பழைமையான மைசூரு தொழிற்சாலை, அழியாத மை தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

இதன் மிகச் சிறப்பான பணி என்னவென்றால், தேர்தல் நேரத்தில், இந்த மை என்பது, இதுவரை எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்த பிறகும் கூட, தவிர்க்கமுடியாததாகிவிட்டதுதான்.

சுமார் 75 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மைசூரு தொழிற்சாலைக்கு, நாட்டின் எந்த மூலையில் தேர்தல் நடந்தாலும் தொடர்பு ஏற்பட்டுவிடும். காரணம், வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் தொழிற்சாலை, நாட்டின் ஒரே ஒரு இடத்தில்தான் அதாவது மைசூருவில்தான் இயங்கி வருகிறது. மைசூரு பெயிண்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிடட் என்ற இந்த நிறுவனம் கர்நாடக அரசின் கீழ் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு முறையும், தேர்தல் நடக்கும் போது இந்த நிறுவனத்துக்கு வரும் உத்தரவைப் பொறுத்து மை தயாரிக்கும் பணி தொடங்கும். வழக்கமாக 10 மி.லி. கொண்ட பிளாஸ்டிக் குப்பிகளில்தான் மை தயாரிக்கப்படுகிறது. இந்த ஒரு 10 மி.லி. குப்பியில் இருக்கும் மையைக் கொண்டு 700 வாக்காளர்களின் கைகளில் மை தடவ முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சிறப்பு ரசாயனத்தின் கூட்டுக்கலவையே இந்த மை என்றும், இது வெகுநாள்கள் நீடிக்கும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் மை தயாரிக்கும் பணி 1962ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சுமார் ஏழு ஏக்கரில் இயங்கி வரும் இந்த நிறுவனம்தான், இன்றுவரை ஒரே ஒரு நிறுவனமாக, மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

தவிரமும், இந்த நிறுவனத்தில் பெயிண்ட் மற்றும் வார்னிஷ்களும் தயாரிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், 25 - 30 வெளிநாடுகளிலிருந்தும் அழியாத மை தயாரிக்கும் ஆணைகள் வரப்பெறுவது வழக்கம். கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் ரூ.8.14 கோடி மதிப்பிலான அழியாத மை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல கோடி மக்கள் வாக்களிக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தற்போதே அழியாத மை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com