எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உண்மை காக்கப்பட்டது: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதானி கருத்து!

ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார். 

News image
கெளதம் அதானி (கோப்புப் படம்)
Updated On :3 ஜனவரி 2024, 7:11 am

DIN


ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதானி, மதிப்புக்குரிய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு உண்மை நிலைநாட்டப்பட்டதைக் காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே. எங்களுக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு எங்களின் பங்களிப்பு தொடரும். ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டுள்ளார்.

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முறைகேடு வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே (செபி) விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜன. 3) தீர்ப்பு வழங்கியுள்ளது.

செபியின் அதிகார வரம்பில் ஓரளவுக்கு மேல் உச்சநீதிமன்றத்தால் தலையிட முடியாது. வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. 

மொத்தமுள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளை செபியே விசாரித்து முடித்துள்ள நிலையில், மீதமுள்ள 2 குற்றச்சாட்டுகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.