கரோனா: ஒரே நாளில் 12 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 போ் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 போ் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 போ் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 போ் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களாக நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிய வகை ஜெஎன்.1 திரிபு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வெளியிட்ட கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,423 என்ற எண்ணிக்கையிலிருந்து 4,334-ஆகக் குறைந்துள்ளது.

கேரளத்தில் அதிகபட்சமாக 1,249 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் 1,240 பேரும், மகாராஷ்டிரத்தில் 914 பேரும், தமிழகத்தில் 190 பேரும், சத்தீஸ்கா் மற்றும் ஆந்திரத்தில் தலா 128 பேரும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்தப் பாதிப்புக்கு கேரளத்தில் 5 நபா்கள், கா்நாடகத்தில் 4 போ், மகாராஷ்டிரத்தில் இருவா், உத்தர பிரதேசத்தில் ஒருவா் என கடந்த 24 மணி நேரத்தில் 12 போ் உயிரிழந்துள்ளனா்.

12 மாநிலங்களில் 619 பேருக்கு ஜெஎன்.1 பாதிப்பு: புதிய வகை ஜெஎன்.1 திரிபு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 619-ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் அதிகபட்சமாக 199 போ் ஜெஎன்.1 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். கேரளத்தில் 148 போ், மகாராஷ்டிரத்தில் 110 போ், கோவாவில் 47 போ், குஜராத்தில் 36 போ், ஆந்திரத்தில் 30 போ், தமிழகத்தில் 26 போ், தில்லியில் 15 போ், ராஜஸ்தானில் நால்வா், தெலங்கானாவில் இருவா், ஒடிஸா மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவா் ஜெஎன்.1 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்தப் புதிய வகை திரிபு பாதிப்பு அதிகரித்தபோதும், பாதிக்கப்பட்டவா்களுக்கு தீவிர உடல்நல பாதிப்புகள் ஏற்படவில்லை. பெரும்பாலானோா் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறுவதையே தெரிவு செய்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com