புவனேஷ்வர்: ஒடிசாவில் நடைபெற்றுவந்த ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வேலைநிறுத்தத்தைத் திரும்ப பெறுவதாக ஒடிசா ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மூன்றாவது நாளாகத் தொடர்ந்துவந்த போராட்டம், மாநில அரசின் வாக்குறுதிக்கு பிறகு சனிக்கிழமை இரவு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா எனப் பெயர்மாற்றம் செய்தது.
இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் ஹிட் & ரன் எனப்படும் விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. இதற்கு முன்பு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: பந்தளம்: அம்பிகா தம்புராட்டி காலமானாா்
ஓட்டுநர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போக்குவரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளா்

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா்

கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!

எரிபொருள் வழங்கி உதவி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி!
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

