ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

News image
Updated On :13 ஜனவரி 2024, 2:18 pm

DIN

மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. 

கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது. 

இப்பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான பயணத்தை வழங்கும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.