நிதீஷ் குமார் பாஜக கூட்டணிக்கு வருவதால் மகிழ்ச்சியும் இல்லை, கவலையும் இல்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பெங்களூருவில் பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “நான் யாரையும் வரவேற்கவும் இல்லை, யாருக்கும் எதிராகவும் இல்லை.
கட்சியின் மத்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன். பாஜக தலைமை என்ன முடிவெடுத்தாலும், அது பிகார் மாநிலம் மற்றும் கட்சியின் நன்மைக்கானதாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால், அதனால் மகிழ்ச்சி அடையப் போவதும் இல்லை, கவலை அடையப் போவதும் இல்லை. நான் பாஜகவின் தொண்டன். கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாஜக கூட்டணிக்கு மாறுகிறாரா நிதீஷ் குமார்? காட்சியும் மாறுமே?
மேலும் பேசிய அவர், “இந்தியா என்றொரு கூட்டணியே இல்லை. அதுவொரு சந்தர்ப்பவாத கூட்டணி மட்டுமே. அவர்கள் சனாதனக் கொள்கைக்கு எதிராக வேலை செய்யக்கூடிய ஒரு கூட்டணி.” என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



