நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின் 100 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மாநிலங்களவையின் 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், நாளைமுதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் அனைத்து எம்பிக்களின் இடைநீக்கத்தையும் ரத்து செய்ய அரசின் சார்பாக அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ‘யூ டர்ன்’ அடித்த நிதீஷ் குமார்: ராகுல் காந்தி விமர்சனம்
மேலும், எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாடாளுமன்றக் குழுக்களிலும் அவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களவை பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து இருவர் புகைக் குப்பிகளை வீசிய விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



