அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

News image

தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டம்.. - படம் | ஏஎன்ஐ

Updated On :1 ஏப்ரல் 2025, 8:58 pm IST

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நாளை(ஏப்ரல் 2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால், பாஜக கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. 

இந்த நிலையில், தில்லி இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால், காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, ராம் கோபால் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா, மாக்ஸிய கம்யூனிஸ்டின் ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்டின் சந்தோஷ் குமார், என்.கே.பிரேமச்சந்திரன், வைகோ ஆகியோரும் விவாதத்தில் கலந்து கொண்டனர். 

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் கூறுகையில், “ஒத்த கருத்துடைய, இந்த மசோதாவுக்கு எதிராக உள்ள அனைவரும் வாக்களிக்க இருக்கிறோம். மேலும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக இந்த மசோதாவை எதிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.