சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை, தில்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை(ஏப்ரல் 2) தொடங்குகிறது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்த சென்னை அணி, குவாஹட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியைடைந்து கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், இந்தப் போட்டிக்கான டிக்கெட் சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.
மேலும், சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே - பெங்களூரு இடையேயான போட்டி டிக்கெட்கள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளும் சிறிது நேரத்திலேயே தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 10.15 மணி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலைகள் மற்றும் ஸ்டாண்டுகள்
ரூ.1,700 – சி/டி/இ லோயர்
ரூ.2,500 –ஐ/ஜே/கெ அப்பர்
ரூ.3,500 – சி/டி/இ அப்பர்
ரூ.4,000 – ஐ/ஜே/கெ லோயர்
ரூ.7,500 – கே.எம்.கே டெரஸ்
இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து விடுவதால், கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு கிட்டத்தட்ட ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை வாங்கும் நிலை இருப்பதாகவும் சில ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? வருகிறது புதிய ஐஆர்சிடிசி இணையதளம்!

பிஃபா உலகக் கோப்பை: அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா - புகைப்படங்கள்

கிரிக்கெட் போட்டி தகராறு: காயமடைந்த நபா் உயிரிழப்பு
கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க... ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டி டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples



