ஜாம்நகர் அருகே  விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரியும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான  ஜாகுவார் விமானம்
ஜாம்நகர் அருகே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரியும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம்

ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் விமானி பலி

ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமான விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ஆமதாபாத்: ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமான விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாம்நகர் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு இருக்கைகள் கொண்ட ஜாகுவார் விமானம் இரவு நேரப் பயணத்தின் போது விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐஏஎஃப் ஊடக ஒருங்கிணைப்பு மையத்தின் எக்ஸ் வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜாம்நகர் விமானநிலையத்தில் இருந்து வான்வழியாக வந்த ஐஏஎஃப் இரண்டு இருக்கைகள் கொண்ட ஜாகுவார் விமானம் புதன்கிழமை இரவு நேரப் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. விமானிகள் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டு விமானத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெற்றிகரமாக நகர்த்தி பாதுகாப்பாக வெளியேற தொடங்கினர். விபத்தில் சிக்கிய விமானத்தில் இரண்டு பேர் இருந்தனர். நல்வாய்ப்பாக ஒரு விமானி காயங்களுடன் தப்பினார். அவர் ஜாம்நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போன மற்றொரு விமானியை விமானப்படை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன விமானி தீயில் சிக்கி உயிரிழந்ததாக வியாழக்கிழமை விமானப்படை அறிவித்துள்ளது.

விமானியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள இந்திய விமானப்படை , விமானியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.

விமான படையின் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை இரவே சென்று பார்வையிட்டனர். இதற்கிடையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு ஐஏஎஃப் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விபத்துக்கு முன்பு ஒரு விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் தீப்பிடித்ததால் மற்றொரு விமானியை மீட்க முடியவில்லை. இதனால் தீயில் சிக்கி விமானி பலியானார் என்றார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மார்ச் 7 ஆம் தேதி, ஹரியாணாவின் அம்பாலா அருகே ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது, அதில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக என்று ஐஏஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com