2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

ஹரியாணா சிறையில் மருத்துவர்களின் போதாமை பற்றி..
2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஹரியாணாவில் உள்ள சிறையில் 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒரே மருத்துவர் என்ற நிலை உள்ளது.

ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள போன்ட்சி சிறையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணா கோயல் ஆய்வு நடத்தச் சென்றார்.

இந்த ஆய்வில் அங்குள்ள 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்க்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தச் சிறையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் கைதிகள் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பெண் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பெண் மருத்துவர் கூட இல்லாதது உடல்நலக் கோளாறால் அவதிப்படும் பெண் கைதிகளின் நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

மருத்துவர்களின் போதாமை பற்றி ஒப்புக்கொண்ட சிறைத்துறை அதிகாரிகள் மூன்று மருத்துவ அதிகாரிகளுக்கான இடத்தில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் நோய்வாய்ப்பட்ட கைதிகளை குருகிராமில் உள்ள பொது மருத்துவமனைக்கு அவர் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்தச் சிறையில் கைதிகளின் நலன் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பாலகிருஷ்ணா கோயல் கேட்டறிந்தார்.

”போன்ட்சி சிறையில் 2ஜி சிக்னல் ஜாமர்கள் மட்டுமே இருப்பதால், 5ஜி நெட்வொர்க் மொபைல் போன்கள் வேலை செய்கின்றன. இதனைப் பயன்படுத்தி பல கேங்ஸ்டர்கள் சிறை வளாகத்தில் மொபைல் போன்களை பயனபடுத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com