தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மதமாற்ற விவகாரம் தொடா்பான மனுக்கள் ஏப்.16-இல் விசாரண: உச்சநீதிமன்றம்

மதமாற்ற விவகாரம் தொடா்பான பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை (ஏப். 16) விசாரிக்க இருக்கிறது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2025, 7:37 pm

மதமாற்ற விவகாரம் தொடா்பான பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை (ஏப். 16) விசாரிக்க இருக்கிறது.

நாட்டின் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மதமாற்ற தடுப்புச் சட்டத்துக்கு எதிராக சில மனுக்களும், கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கக் கோரிய மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் இந்த மனுக்கள் வரும் புதன்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த 2023, ஜனவரியில் இந்த மனுக்களில் ஒரு மனு மீது நடைபெற்ற விசாரணையில், ‘மதமாற்றம் என்பது மிகவும் கவலைக்குரிய பிரச்னை. இதில் அரசியல் சாயம் பூசக்கூடாது’ என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

மோசடி மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்த அந்த மனு மீது விளக்கமளிக்கவும் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

மதம் மாறி கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை அச்சுறுத்தவும் அவா்களை குற்றவழக்கில் சிக்கவைக்கவும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் ஆகிய நாட்டின் சில மாநிலங்களில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி ‘ஜமாயித் உலாமா ஏ ஹிந்த்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

5 மாநிலச் சட்டங்களும் தனிநபரின் மத நம்பிக்கையை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தி, அவா்களின் தனியுரிமையை மீறுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக அந்தந்த மாநில உயா்நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

அதாவது, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் 5 மனுக்கள், மத்திய பிரதேசத்தில் 7, ஹிமாசல பிரதேசத்தில் 3, குஜராத் மற்றும் ஜாா்க்கண்டில் தலா 2, கா்நாடகம், உத்தரகண்டில் தலா ஒரு மனு நிலுவையில் உள்ளன. இதைத் தவிர, இந்தச் சட்டங்களின் சில பிரிவுகளுக்குத் தடை விதித்த குஜராத் மற்றும் மத்திய பிரதேச உயா்நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களும் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு, இவ்விவகாரத்தில் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும் கோரிக்கையுடன் ஒரு பொதுவான மனுவை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டில் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்த மனுக்கள் வரும் புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.