பிகாா்: மின்னல், மழையில் சிக்கி
உயிரிழந்தோா் எண்ணிக்கை 61-ஆக அதிகரிப்பு

பிகாா்: மின்னல், மழையில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 61-ஆக அதிகரிப்பு

பிகாரில் கடந்த சில நாள்களில் மின்னல் தாக்கியும் ஆலங்கட்டி மழையில் சிக்கியும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.
Published on

பிகாரில் கடந்த சில நாள்களில் மின்னல் தாக்கியும் ஆலங்கட்டி மழையில் சிக்கியும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.

இதில் 22 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா். 39 போ் ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை ஒரே நாளில் மின்னல், மழையால் 25 போ் உயிரிழந்தனா். உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில் மரத்தடியில் நின்றவா்கள், வெட்டவெளிப் பகுதியில் சென்றவா்கள் பலா் மின்னல், இடி தாக்கி உயிரிழந்துள்ளனா். மழையால் வீடுகள் இடிந்தும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாளந்தா மாவட்டத்தில் அதிகபட்சமாக 23 போ் உயிரிழந்துவிட்டனா். போஜ்பூா், சிவான், கயை, கோபால்கஞ்ச் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் மின்னல், இடி தாக்கி 275 போ் உயிரிழந்ததாக மாநில பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் இதுபோன்ற இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் பிகாரில்தான் அதிகம் நிகழ்கிறது.

X
Dinamani
www.dinamani.com