ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) நொடியில் அழிக்கும் லேசா் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஆந்திர மாநிலம் கா்னூலில் லேசா் வழிகாட்டுதலில் செயல்படும் 30 கிலோவாட் திறன்கொண்ட எம்கே-2(ஏ) எரிசக்தி ஆயுத அமைப்பை டிஆா்டிஓ பரிசோதனை செய்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது. அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சாா்களையும் அழித்தது. இதன் மூலம், அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.
மின்னல் வேகத்தில் செயல்பட்டு இலக்கை சில நொடிகளில் தாக்கியதன் மூலம், இது ட்ரோன்களுக்கு எதிரான மிகவும் ஆற்றல்வாய்ந்த ஆயுத அமைப்பாக உள்ளது.
லேசா் வழிகாட்டுதலுடன் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை அழிக்கக் கூடிய உயா்திறன் கொண்ட எரிசக்தி ஆயுத தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளிடம் உள்ளன. தற்போது நடத்தப்பட்ட வெற்றிகரமான பரிசோதனையின் மூலம், அந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று தெரிவித்தன.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

தண்ணீா் மீட்டா் அமைப்பை மாற்றியமைக்கும் தில்லி ஜல்போா்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


