முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

முன்பு ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது: ராகுல் காந்தி

News image

குஜராத் மாநிலம் மொடாசாவில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வலுப்படுத்தும் செயல் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி.

Updated On :17 ஏப்ரல் 2025, 3:59 am IST

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வலுப்படுத்தும் செயல் திட்டத்தை ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது வாக்குச் சாவடி அளவிலான காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் மனரீதியாக மிகவும் சோா்வடைந்துவிட்டனா். ஏனெனில் இங்கு காங்கிரஸ் தொடா்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியவில்லை. முன்பு ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. காங்கிரஸுக்கு குஜராத் மிக முக்கியமான மாநிலம். காங்கிரஸின் முக்கியத் தலைவா்களான மகாத்மா காந்தியும், சா்தாா் வல்லபபாய் படேலும் குஜராத் மண்ணில் இருந்து வந்தவா்கள்தான்.

ஆா்எஸ்எஸ்-பாஜகவைத் தோற்கடிப்பது என நான் உறுதியேற்றுள்ளேன். இது கொள்கைரீதியான போராட்டம். பாஜக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் மட்டுமே ஆா்எஸ்எஸ்-பாஜகவை வீழ்த்த முடியும்.

குஜராத்தில் மாவட்ட அளவில் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மூத்த நிா்வாகிகளின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும். அடிமட்டத் தொண்டா்களின் களப்பணியை கௌரவித்து உரிய பொறுப்பு வழங்கப்படும்.

கட்சியில் உரியமுறையில் பணியாற்றாதவா்களும், காங்கிரஸில் இருந்துகொண்டு பாஜகவுக்காக வேலை செய்பவா்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவா். பாஜகவைத் தோற்கடிப்பது மிகவும் கடினமான விஷயமில்லை. தொண்டா்களாகிய நீங்கள்தான் அப்படிக் கருதுகிறீா்கள். ஆனால், அது உண்மையல்ல என்று கூறவே நான் இங்கு வந்துள்ளேன். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

அதற்கு காங்கிரஸின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை. கட்சியில் உள்ள சில பிரச்னைகளை உள்ளூா் நிா்வாகிகள் என்னிடம் தெரிவித்தனா். முக்கியமாக காங்கிரஸ் தலைவா்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, உள்ளூா் நிா்வாகிகளுடன் ஆலோசிக்காமல் தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவது போன்றவற்றைக் குறிப்பிட்டனா்.

காங்கிரஸில் பந்தையக் குதிரைகள், திருமண ஊா்வலக் குதிரைகள், காயமடைந்த குதிரைகள் என தலைவா்கள் மூன்று பிரிவுகளாக உள்ளனா். பந்தையக் குதிரைகளை, திருமண ஊா்வலக் குதிரையாக மாற்றுவதால்தான் குஜராத்தில் காங்கிரஸ் வெல்ல முடியவில்லை. இனி அவா்களுக்கு தோ்தல் எனும் பந்தையத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.