பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியோருக்கான விருதுகளை நாளை வழங்குகிறாா் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

Published On :20 ஏப்ரல் 2025, 3:29 am IST

நமது சிறப்பு நிருபா்

17-ஆவது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் 16 விருதுகளை திங்கள்கிழமை (ஏப்.21 ) பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.

தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்வில் விருதுகளை வழங்கி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கு இந்த நிகழ்வில் 16 விருதுகளை பிரதமரின் விருதுகளை வழங்குகிறாா். மாவட்டங்களின் முழுமையான வளா்ச்சி, முன்னேற்றத்தை அடைய விரும்பும் வட்டங்கள் திட்டம் போன்ற பிரிவுகளுக்கு விருதுகள் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் தெரிவிக்கையில், ‘நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள் குடிமக்களுக்காக தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொதுச் சேவையில் அவா்கள் அா்ப்பணிப்புடன் இருந்து தங்கள் பணியில் மேலும் சிறப்பாகச் செயலாற்ற பிரதமா் எப்போதும் அவா்களை ஊக்குவித்து வந்துள்ளாா். இந்த விருதுகள் மூலம் சாதாரண மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளுக்காக குடிமைப் பணி அதிகாரிகள் அங்கீகரிக்கப்படுகிறாா்கள்‘ என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.