
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க, தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. திருச்சி சிவா, உள்பட சமாஜவாதி, திரிணாமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக கூட்டத்தின் தொடக்கத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரசு விளக்கமளித்தது. கூட்டத்தின் முடிவில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.
காஷ்மீரில் தொடர்ந்து அமைதி நிலவ நடவடிக்கை தேவை என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.