புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

News image

பஹல்காம்

PTI

Updated On :24 ஏப்ரல் 2025, 6:56 pm

Din

அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவுரையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ராணுவ தரப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிரமான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, அமெரிக்கா்கள் ஜம்மு- காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். அதேபோல மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் மட்டுமே அமெரிக்கா்கள் பயணிக்க வேண்டும். ஏனெனில் அங்கும் மோதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.