

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரது வீட்டையும், இரண்டு மொபைல் போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் முகநூலில் சைமன் கருத்துகளைப் பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சைமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.