நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள பூங்காவுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படுவதைப் பற்றி...

News image

தங்களது திருமண நாளன்று மனைவி ஐஷான்யாவுடன் பெஹல்காம் தாக்குதலில் பலியான சுபம் திவிவேதி. - இன்ஸ்டாகிராம்

Updated On :26 ஏப்ரல் 2025, 4:19 pm IST

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பெஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதலில் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவிவேதி (வயது 31) எனும் நபர் அவரது மனைவி ஐஷான்யாவின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும், பலியான சுபம் மற்றும் அவரது மனைவியான ஐஷான்யா ஆகியோருக்கு கடந்த பிப்.12 ஆம் தேதி அன்றுதான் திருமணமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கான்பூரின் ஷியாம் நகரிலுள்ள ஒரு பூங்கா மற்றும் சத்துக்கத்திற்கு சுபமின் பெயர் சூட்டப்படும் என கான்பூர் நகர் மேயர் பிரமிலா பாண்டே இன்று (ஏப்.26) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கான்பூர் நகராட்சி ஷியாம் நகரிலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு, பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவிவேதியின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், சுபமின் மனைவியான ஐஷான்யா விருப்பப்பட்டால் அவருக்கு நகராட்சியில் வேலை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று (ஏப்.25) கான்பூர் மேயர் பிரமிலா பாண்டே தலைமையில் பாஜக நிர்வாகிகள் இணைந்து நகராட்சி அலுவலத்திலிருந்து மொதிஜீல் எனும் பகுதி வரை பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.