தலைநகர் தில்லியில் குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு தில்லியின் ரோகிணிப் பகுதியில் உள்ள ஜுக்கி கிளஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
காவல்துறையின் கூற்றுப்படி, 400க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.
இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
தீயை அணைக்க தற்போது தீயணைப்பு வீரர்கள் முயற்சிக்கின்றனர். மேலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை நடந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
போலீஸ் மற்றும் தீயணைப்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது, குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ரோகிணி துணை காவல் ஆணையர் அமித் கோயல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாடிப்பட்டி அருகே சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

மானூரில் விபத்து: விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



