திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை தேர்வு செய்யும் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்.

News image
பி.ஆர். கவாய் - PTI
Updated On :29 ஏப்ரல் 2025, 3:25 pm

DIN

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் மே 14-ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்கிறாா்.

இப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா்.

புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடா்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. முன்னதாக வழக்கமான நடைமுறைப்படி கடந்த 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தாா்.

பி.ஆா். கவாய் வரும் டிசம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை இப்பதவியை வகிப்பாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கவாய், கடந்த 1985-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் கடந்த 1992-1993 காலகட்டத்தில் அரசுத் தரப்பு உதவி வழக்குரைஞராகப் பணியாற்றிய இவா், 2000-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2003-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2005-இல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றாா். 2019, மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.