
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கட்சித் தொடர்புடைய ஒருவரை நீதிபதியாக நியமிப்பது, நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஜூலை 28 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், அஜித் பகான்ராவ் கதேதங்கர், ஆர்த்தி அருண் சாத்தே மற்றும் சுஷில் கோதேஷ்வர் ஆகியோரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிர அரசு செய்த பரிந்துரையின்பேரில், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்த்தி அருண் சாத்தே என்பவர் 2023 ஆண்டு பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு, கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்ததாவது,
பாஜக அலுவலகப் பொறுப்பாளர் ஆர்த்தி சாத்தேவை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையின் மீது இருளைப் போர்த்தும் சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.