
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக ஒடிசாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது.
நரி நியாய யாத்திரை ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை தொடரும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் தெரிவித்தார்.
பூரியின் பலங்காவில் பெண் ஒருவரை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் மூன்று பேரை கைது செய்யக் கோரி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்டாக்கில் உள்ள டிஜிபி அலுவலகத்தைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் முற்றுகையிடுவார்கள் என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறைக்கு ஏழு நாள் அவகாசம் அளித்து இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆகஸ்ட் 10 ஆம் தேதி, பலங்காவில் உள்ள சிறுமியின் கிராமத்தில் காங்கிரஸ் 'யாத்திரை' நடத்தும். இந்தப் பேரணி சிறுமியின் கிராமத்திலிருந்து தொடங்கி நிமபாடா நகரத்தை அடையும். அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும்.
பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாஸ் வலியுறுத்தினார்.
ஜூலை 19 அன்று சிறுமியை மூன்று பேர் தீ வைத்து எரித்ததாகச் சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆகஸ்ட் 2 அன்று அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று போலீஸார் கூறினர்.
பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரில் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து தீக்குளித்ததாகக் கூறப்படும் மாணவிக்கு நீதி கோரி, ஆகஸ்ட் 14 அன்று பாலசோரிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்படும் என்று தாஸ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.