மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

உத்தரகண்ட் பேரிடரில் 28 கேரள சுற்றுலாப் பயணிகள் மாயமானது குறித்து...

News image

உத்தரகண்ட் பேரிடரில் சிக்கி கேரள சுற்றுலாப் பயணிகள் 28 பேர் மாயமாகியுள்ளனர். - PTI

Updated On :6 ஆகஸ்ட் 2025, 10:20 am

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் கங்கையில் உண்டான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், உத்தரகாசி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவினர், மேகவெடிப்புக்கு பின் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதில், 20 பேர் மகாராஷ்டிரத்தில் குடியேறியவர்கள் எனவும், மீதமுள்ள 8 பேர் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மாயமான சுற்றுலாப் பணிகளின் உறவினர் ஒருவர் கூறுகையில், இறுதியாக அவர்கள் அனைவரும் நேற்று (ஆக.5) காலை 8.30 மணியளவில் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியதாகவும், அதையடுத்து, அவர்களது பயண வழியில் நிலச்சரிவு ஏற்பட்ட பின்பு, அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த ஹரித்வாரைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்துக்கு அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆக.5 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட மேகவெடிப்பினால் உண்டான இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A tourist group of 28 people from Kerala have reportedly gone missing in a cloudburst disaster in Uttarakhand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.