தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம்: கேரள ஆளுநர்

தாய்மொழியில் கல்வி பயில தேசிய கல்விக் கொள்கை உதவும்: கேரள ஆளுநர்
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்@KeralaGovernor
Updated on
1 min read

திருவனந்தபுரம்: தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்ப்டுகிறது; தாய்மொழியில் கல்வி பயில தேசிய கல்விக் கொள்கை பேருதவிகரமாக இருக்கும் என்று கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சரான ஜான் மத்தாயின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா இன்று(டிச. 2) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்நிக்ழச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அவர் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், ‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் கல்வி பயில்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்’ என்றார்.

மேலும், ‘கேரள பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தராக பதவி வகித்த மத்தாய் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்தவர் என்பதையும், அவர் சிறந்த நேர்மைக்குச் சொந்தக்காரர்’ என்றும் தமது உரையில் ஆளுநர் குறிப்பிட்டார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் வளர்ச்சிக்கு கேரளத்தின் பல்வேறு அறிஞர்கள் பல விதங்களிலும் உதவி புரிந்திருப்பதாகவும் கேரளத்துக்கு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புகழாரம் சூட்டினார்.

Summary

Kerala Governor Rajendra Vishwanath Arlekar on Tuesday underscored the importance of mother tongue in education, saying the Centre's National Education Policy gives due weight to learning native languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com