இனி 2 மாத அட்வான்ஸ் போதும்! ... வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டத்தின் சிறப்புகள் என்ன?

வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன.

இதன்படி, இனி 2 மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்தால் போதுமானது; வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்துச் செல்வோர், வீட்டு உரிமையாளர் என இருதரப்புக்கும் நன்மை பயக்கும் அம்சங்கள் உள்ளன. அவற்றை குறித்து காணலாம்.

  • வீட்டை வாடகைக்கு விட்டால், அந்த ஒப்பந்தத்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண பாண்டு பேப்பரில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

  • ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக் கூடாது.

  • வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக் கூடாது. வணிக கட்டடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.

  • ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீஸ் மூலம் வாடகைதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

  • வாடகை இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகை தொகையில் கழித்துக்கொள்ளலாம்.

  • வாடகை இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழைய முடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.

  • வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்த முடியாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் எனக் குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக் கூடாது.

  • வாடகை தகாராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.

  • வீட்டு வாடகை ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்ய வேண்டும். சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டிடிஎஸ் விலக்கு வரம்பு ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் பதிவு செய்வது எப்படி?

வாடகைதாரரும் உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை, என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது.

என்ன பலன்?

வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு இல்லை, சட்டப் பாதுகாப்பு எளிமையானது.

வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாகும், தகராறுகளுக்கு விரைவில் தீர்ப்பு, மோசடி தடுக்கப்படும்.

இதையும் படிக்க | கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com