காஜியபாத்தில் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

காஜியபாத்தில் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று கௌரவ் என்பவா் தலைமைறைவானாா். இவா் செப்.11-ஆம் தேதி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

இவரது இருப்பிடம் குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, காஜியாபாத்தில் வைத்து காவல் துறையினா் இவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், பல்வேறு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.

Śவா் மீது ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிழக்கு தில்லி மற்றும் காஜியாபாத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டாளிகளுடன் இணைந்து சாலையில் தனியாக செல்பவா்களை இவா்கள் குறிவைத்து வந்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com