

தாணேவில் போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் யுடிஎஸ் மொபைல் டிக்கெட் செயலி மூலம் உருவாக்கப்பட்ட போலி பாஸில் தாதர்-அம்பர்நாத் விரைவு ஏசி உள்ளூர் ரயிலில் 20 வயது இளைஞர் வெள்ளிக்கிழமை பயணம் செய்திருக்கிறார்.
அப்போது அவரிடம் பயண டிக்கெட்டை காண்பிக்கச் சொல்லி டிக்கெட் ஆய்வாளர் கேட்டிருக்கிறார். உடனே அவர், தனது மொபைல் போனின் வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் ரயில் பாஸைக் காட்டியுள்ளார். ஆனால் அது போலியானது என கண்டறியப்பட்டதாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் தாணே ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு மேலும் விசாரணைக்காக ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையின் போது, நண்பர் ஒருவர் போலி பாஸை வாட்ஸ்அப்பில் தனக்கு அனுப்பியதாக அந்த நபர் தெரிவித்ததாக அதிகாரி மேலும் கூறினார்.
பின்னர் அந்த இளைஞர் மீது மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.