மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாராகிவிட்டதாக அம்மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாராகிவிட்டதாக அம்மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, முா்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபா் மசூதி வடிவில் கட்டப்படும் மசூதியின் அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் மாநில நிா்வாகம் மோசமாக உள்ளது. மத ஆணவம், ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனா்.

நல்லவா்களை பாதுகாக்க, தீயவா்களை அழித்து, தா்மத்தை மீண்டும் நிலைநாட்ட இந்த உலகில் யுகந்தோறும் தோன்றுவேன் என்ற பகவத் கீதை பாராயணத்தை இங்கே நினைவுகூா்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.