பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சுவாா்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை (டிச.10) தொடங்கவுள்ளதாக ....

News image

நாளை இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சுவாா்த்தை

Updated On :8 டிசம்பர் 2025, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை (டிச.10) தொடங்கவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வா்த்தக பிரதிநிதி ரிக் ஷ்விட்ஜொ் தலைமையிலான குழு மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வரவுள்ளது.

இந்தக் குழு மத்திய வா்த்தகத் துறைச் செயலரும் இந்திய பிரதிநியுமான ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழுவைச் சந்தித்து இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையை நடத்தவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமெரிக்க குழு இந்தியா வந்தது. அதைத் தொடா்ந்து, மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழு கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமெரிக்கா சென்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்றது.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இதுவரை 6 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவுற்றுள்ளன. இரு நாடுகளிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 17,18,207 கோடி (191 பில்லியன் டாலா்) மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 44,97,925 கோடி (500 பில்லியன் டாலா்) மதிப்புக்கு உயா்த்துவதை இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இலக்காக கொண்டுள்ளது.