

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா பிரதமர் நரேந்திர மோடியை இன்று (டிச., 9) சந்தித்தார்.
இந்த சந்திப்பின் மூலம் செய்யறிவு தொழில்நுட்பத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடியை மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆசியாவிலேயே மைக்ரோசாஃப் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.
செய்யறிவு தொழில்நுட்பத்திற்கான திறன் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது.
பிரதமர் நரேதிர மோடியுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா இன்று சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சத்யா நாதெள்ளா பதிவிட்டுள்ளதாவது,
''இந்தியாவில் செய்யறிவு தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையிலான கலந்துரையாடலுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் இலக்கிற்கு உதவும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலீடாக 17.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளோம்.
இந்தியாவின் எதிர்கால செய்யறிவு தொழில்நுட்பத்திற்குத் தேவையான உள்கட்டமைப்புகள், திறன் மற்றும் இறையான்மை வாய்ப்புகளை கட்டமைப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | காந்தி, படேலை தவிர்த்து நேருவை மட்டும் குறிவைப்பது ஏன்? மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.