

நாள்தோறும் வாரணாசியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், ரோப் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2026ஆம் ஆண்டு மே மாதத்துக்குள், வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து, ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நகரத்துக்குள், ரோப் கார் சேவை உருவாக்கப்படுவது, நாட்டிலேயே இது முதல் முறை என்றும், இதற்காக ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்து, 2026ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று வாரணாசி மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நகரத்துக்கு பல முறை வந்து சென்றிருக்கும் பிரதமர் மோடியின் பயணத்தைத் தொடர்ந்தே, நகரின் வளர்ச்சிக்காக இந்த திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டோம். மூன்றாவது முறையாக, வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வாரணாசி நகரின் மேம்பாட்டுக்காக மொத்தமாக ரூ.60 ஆயிரம் கோடியிலிருந்து தற்போது ரூ.40 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
தற்போது ரோப் கார் வசதி ஏற்படுத்த காரணம், முன்பெல்லாம், நாள்தோறும் இந்தக் கோயிலுக்கு 5,000 பக்தர்கள் வந்து சென்றார்கள், தற்போது இது 2 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த நகரில் சுமார் 42 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.