

கர்நாடகத்தில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் கட்டேதார் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் 5,994 வாக்காளர்கள் பெயர், சட்டவிரோதமாக நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் 2022 - 23ஆம் காலக்கட்டத்தில் நடந்திருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தனிநபர்கள் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்திருக்கிறார்கள். ராகுல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, ஆன்லைன் மூலம், வாக்காளர் பெயர்கள் நீக்கவே முடியாது என்றும், ராகுல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்த நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.