ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

அசாமில் பயணிகள் ரயில் மோதியதில் 8 யானைகள் பலியான நிலையில் 5 பெட்டிகள் தடம்புரண்டன

News image

யானைகள் - பிரதி படம்

Updated On :20 டிசம்பர் 2025, 9:51 am IST

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில், சனிக்கிழமை அதிகாலை நேரத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின. ரயில் பெட்டிகள் தண்டம் புரண்டு விபத்துக்குள்ளானது.

புது தில்லி சென்று கொண்டிருந்த ராஜ்தானி விரைவு ரயிலின் என்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகள் தண்டம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து வடகிழக்கு ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் கூறுகையில் விபத்து இன்று அதிகாலை 2.17க்கு நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ரயில் ஓட்டுநர், யானைகள் கூட்டத்தைப் பார்த்ததும் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தியிருக்கிறார். ஆனாலும் யானைகள் மீது ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின. ரயிலின் வேகத்தை குறைத்து பிரேக் போட்டிருப்பதால், மிகப்பெரிய சேதம் ஏற்படாமல், பெட்டிகள் தடம்புரண்டு நின்றன. பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ பகுதியில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.