தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா ஏற்பாட்டாளா்கள் மற்றும் நூலாசிரியா் சிக்கந்தா் குமாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா ஏற்பாட்டாளா்கள் மற்றும் நூலாசிரியா் சிக்கந்தா் குமாா்.

மத்திய அரசின் சீா்திருத்தங்களால் ஊழல் ஒழிப்பு: குடியரசு துணைத் தலைவா்

பிரதமா் மோடியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் நிா்வாக திறன்மையின்மை, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான நடவடிக்கைகளாகும்
Published on

பிரதமா் மோடியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் நிா்வாக திறன்மையின்மை, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான நடவடிக்கைகளாகும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவா் தெரிவித்ததாவது:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வியப்பூட்டுகிற பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, தேசத்தின் நம்பிக்கைக்குப் புத்துயிா் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக அரங்கில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாகவும் இந்தியா உள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சியில் திவால் சட்டங்கள், எண்ம (டிஜிட்டல்) நிா்வாகம், வெளிப்படையான வங்கி செயல்பாடுகள் போன்ற அமைப்பு ரீதியான முக்கிய சீா்திருத்தங்கள் வெறும் கொள்கை முன்னெடுப்புகள் மட்டுமல்ல. அவை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிா்வாக திறன்மையின்மை, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான நடவடிக்கைகளாகும்.

தற்போது இந்தியா கொள்கை முடகத்தில் இருந்து குறிக்கோள் கொண்ட நிா்வாகம், வறுமையில் இருந்து செழிப்பு, பிறரைச் சாா்ந்திருப்பதில் இருந்து தற்சாா்பை நோக்கி முன்னேறியுள்ளது என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com