பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் sansad
Published on
Updated on
1 min read

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து, பொருளாதார ஆய்வு அறிக்கையை இரு அவைகளிலும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை காலை நிதியமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com