
புது தில்லி: மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில் அவை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது.
மக்களவையில் இன்று அவை கூடியதும், மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்நது கோஷம் எழுப்பினர்.
ஒருபக்கம், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பிய நிலையில், மறுபக்கம், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், அவைத் தலைவர் இருக்கையை சுற்றி எதிர்க்கட்சிகள் நின்றுகொண்டு முழக்கமிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.