தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இன்று மாலையுடன் ஓய்கிறது தில்லி பிரசாரம்!

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா?

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 7:59 am

DIN

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

தலைநகர் தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியா போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

முன்னால் முதல்வரும், ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கேஜரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் பரபரப்பாக நடந்துவரும் அரசியல் கட்சி பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகின்றது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

தில்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது.கடந்த 2015 மற்றும் 2020ல் நடைபெற்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளதால், இன்று முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான வேலைகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.

அதேபோன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகள் தில்லியின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2020ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த முறையும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.