சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்வி

முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :4 பிப்ரவரி 2025, 7:44 am

DIN

புது தில்லி: வெளிநாட்டினரை தடுப்பு மையங்களில் வைத்திருக்கும் வழக்கில், முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று உச்ச நீதிமன்றம் அசாம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குப் பதிலாக தடுப்பு மையங்களில் காலவரையின்றி வைத்திருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் அசாம் அரசை கடுமையாகக் கண்டித்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களை நாடு கடத்த முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 63 பேரை நாடு கடத்தும் நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தொடங்கி, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒருவர் வெளிநாட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை நாடு கடத்தி விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

"வெளிநாட்டினரின் முகவரி தெரியவில்லை எனக் கூறி நாடு கடத்துவதைத் தொடங்க மறுத்துவிட்டீர்கள். அது ஏன் எங்கள் கவலையாக இருக்க வேண்டும்? நீங்கள் அவர்களை வெளிநாட்டுக்கு நாடு கடத்துங்கள். நீங்கள் முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா?" என்றும் நீதிபதிகள் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.