இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம்ANI
Published on
Updated on
1 min read

இந்து சமய நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது.

நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனது கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் பொறுப்புகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் இந்து நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியாக நீக்கியுள்ளது. தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர். நாயுடு உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பணிபுரியும்போது இந்து சமய நெறிமுறைகளைக் கடைபிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 18 பேர் நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் அவர்களை அரசின் பிற துறைகளில் பணிபுரிய தேவஸ்தானம் பரிந்துரைக்கிறது அல்லது அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கிறது.

கோயில்கள் மற்றும் மதம் சார்ந்த புனிதத் தன்மையைக் காப்பதில் தேவஸ்தானத்தின் உறுதியுடன் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அதாவது, தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத பிற மதத்தினர் அரசின் பிற துறைகளுக்கு பணியிட மாற்றம் அல்லது விருப்ப ஓய்வு பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.