தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி தொடர்ந்து பின்னடைவில் உள்ளனர். மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காலை 10.50 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணைய இணையதளத் தரவுகளின்படி பாஜக - 40, ஆம் ஆத்மி - 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்(பட்லி தொகுதி) மட்டும் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதலில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், 386 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்கைவிட முன்னிலையில் இருந்தார். மீண்டும் தற்போது(11 மணி) 225 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் தில்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷியும் தொடர்ந்து பின்னடைவில்(1,700 வாக்குகள் வித்தியாசம்) உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!

அமைதி வழிப் போராட்டங்கள் அச்சுறுத்தலின்றி அனுமதிக்கப்பட வேண்டும்: ஐ.நா.

சிஜேபி போராட்டம்! 4வது நாளாக தில்லியின் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

பிரதானை பதவி நீக்கம் செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: சிசோடியா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



