FOLLOW US

ON GOOGLE DISCOVER

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

அமைதி வழிப் போராட்டங்கள் அச்சுறுத்தலின்றி அனுமதிக்கப்பட வேண்டும்: ஐ.நா.

புது தில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றித் தெரியும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

News image

சிஜேபி போராட்டம் - படம்: PTI

Updated On :25 ஜூலை 2026, 10:16 pm IST

புது தில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றித் தெரியும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் முன்னரே வினாத்தாள் கசிந்ததாக நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜூன் 27 ஆம் தேதியில் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும்கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்றது.

இந்தியாவில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் பற்றி ஐ.நா. வின் நிலைப்பாடு பற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் பேசுகையில், "புது தில்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். அமைதியான முறையில் போராட விரும்புவோர் துன்புறுத்தல், கைது போன்ற அச்சமின்றி அவர்கள் அனுமதிக்கப்படுவது முக்கியம். அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது பாதுகாப்புப் படையினரின் கடமை” என்று அவர் தெரிவித்தார்.

Summary

Peaceful protests must be allowed without intimidation: UN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.