ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்(கோப்புப்படம்)
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்(கோப்புப்படம்)

கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்த மோகன் பாகவத்

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சனிக்கிழமை சந்தித்தார்.
Published on

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சனிக்கிழமை சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, கொல்கத்தா அருகே உள்ள ராஜர்ஹட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.​​​​

அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக பாகவத் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேரளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை மேற்கு வங்கம் வருகை தந்த நிலையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொடூரமான முறையில் பாலியல் கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது.

மகா கும்பமேளா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் புனித நீராடல்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த கொல்கத்தா விசாரணை நீதிமன்றம், அவா் மரணமடையும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com