பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது இந்திய ராணுவம்: மனோஜ் சின்ஹா

எதிரி படைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்..

News image

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Updated On :17 பிப்ரவரி 2025, 8:35 am

DIN

இந்திய ராணுவம் முழு திறன் கொண்டது என்றும், எதிரி படைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறினார்

விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்த இடைநிறுத்தமும் இருக்காது. பாதுகாப்பு அமைப்புகளுக்கு அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், பிராந்தியத்தில் அமைதியை உறுதிசெய்யத் தெளிவான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

எல்லைத் தாண்டிய துப்பாக்கிச்சூடு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சமீபத்தில் நடந்த பல குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு மத்தியில், இந்திய ராணுவம் முழு திறன் கொண்டுள்ளது என்றும் எல்லையில் தகுந்த பதிலடி கொடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்படுவதாகவும், பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும், இந்த சுற்றுச்சூழல் அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரவும் தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.