மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டி

News image
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவா்கள் கூட்டம். ~புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவா்கள் கூட
Updated On :20 பிப்ரவரி 2025, 8:25 pm

Din

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா்.

தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ரேகா குப்தா முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்ற நிகழ்ச்சியில் என்டிஏ ஆட்சிபுரியும் மாநில முதல்வா்கள், துணை முதல்வா்கள் மற்றும் பிற மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.

அதன் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது. தில்லி முதல்வா்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து என்டிஏ கூட்டணித் தலைவா்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

இது குறித்து பாஜக பொதுச்செயலா் வினோத் தாவ்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்டிஏ தலைமையிலான மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் மேம்பாட்டுக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என கூட்டணிக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேலும் பிகாா், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்பட அடுத்து வரவிருக்கும் பேரவைத் தோ்தல்களிலும் இதே ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா் என்றாா் வினோத் தாவ்டே.

Story image