ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரளத்தில் சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள் கிடந்துள்ளன.

கேரளத்தில் சம்பவம்

Published On :

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்கள், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையராக இருந்த மணீஷ் விஜய், அவரது தாய் சகுந்தலா, சகோதரி ஷாலினி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களது பூர்வீகம் ஜார்க்கண்ட் மாநிலம்.

மூவரது உடல்களும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மணீஷ் மற்றும் ஷாலினி ஆகியோர் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவர்களது தாய் உடல் படுக்கையிலும் கிடந்துள்ளது.

இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிப். 20ஆம் தேதி மூன்று பேரின் உடல்களைக் கண்டுபிடித்தோம். அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். உடல் கூறாய்வு முடிந்துவிட்டது. அந்த அறிக்கை வந்தபிறகுதான் மூவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.