27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை தொடர்பாக...

News image

தெலங்கானா சுரங்க விபத்து.

Updated On :23 பிப்ரவரி 2025, 10:08 am IST

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவா்களை மீட்கும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை

இது தொடர்பாக தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சுரங்கப் பாதைக்குள் செல்வதற்கு இஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டன. சுரப்பாதையின் வாயிலிருந்து 13.5 கி.மீ. வரை பயணித்தோம். இடிந்து விழுந்த கடைசி 200 மீட்டர் பகுதி முற்றிலும் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளது.

இதனால் சிக்கிய தொழிலாளர்களின் நிலை அல்லது அவர்கள் உள்ள சரியான இடத்தை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மூலம் கடைசி தூரம் வரைச் சென்றோம். ஆனால் எங்களால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இடிபாடுகள் அகற்றப்படும்வரை பாதிக்கப்பட்டவர்களின் இருக்கும் இடத்தை எங்களால் கண்டறிய முடியாது. 11 கி.மீ. முதல் 13 கி.மீ. வரை தண்ணீரால் சூழப்பட்டுள்ளது, தற்போது அந்நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணிகள் முடிந்ததும் மீட்புப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.