மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பும் வழியில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் இருந்து பிப். 18 அன்று மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள 8 பேர் ஜீப்பில் சென்றனர்.
கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் இன்று காலை மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் ஜபல்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்திலுள்ள கோகாக் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.